கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா?

ஆகஸ்ட் 30, 2018 509

சென்னை (30 ஆக 2018): இன்று நடைபெறும் கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டத்தில் பாஜக பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று நடக்கும் கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள், 4 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ‘கலைஞருக்கு புகழ் வணக்கம்’ என்ற தலைப்பில் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 17-ம் தேதி திருச்சியில், 'கருத்துரிமை காத்தவர் கலைஞர்' என்ற தலைப்பில் ஊடக வல்லுநர்கள், 19-ம் தேதி மதுரையில், 'முத்தமிழ் வித்தகர் கலைஞர்' என்ற தலைப்பில் இலக்கியத் துறையினர், 25-ம் தேதி கோவையில், 'மறக்க முடியுமா கலைஞரை' என்ற தலைப்பில் கலைத்துறையினர், 26-ம் தேதி திருநெல்வேலியில், 'அரசியல் ஆளுமை கலைஞர்' என்ற தலைப்பில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் 'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் புகழ் வணக்க கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கவுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட டத்துக்கு கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக் கிறார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார்.

முன்னாள் பிரதமர் தேவே கவுடா, எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மாநிலங்களவை திரிணாமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் பாஜக சார்பில் அதன் தலைவர் அமித் ஷா பங்கேற்பதாக அழைப் பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை என பாஜக அறிவித்துவிட்டது. இந்நிலையில் மத்திய கப்பல், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பங்கேற்பார் என அறிவித்துள்ளது. ஆனால் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பாஜகவை அழிக்க வேண்டும் என்று பேசியதால் பாஜக தலைவர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...