அழகிரியின் திடீர் அறிவிப்பால் திமுகவில் திடீர் திருப்பம்!

ஆகஸ்ட் 30, 2018 2002

சென்னை (30 ஆக 2018): அழகிரி திமுகவில் புயலை கிளப்புவார் என எதிர் பார்க்கப் பட்ட சமயத்தில் வேறொரு அறிவிப்பை வைத்து திடுக்கிட வைத்துள்ளார்.

திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். அதற்காக, திமுகவில் ஸ்டாலினை பிடிக்காதவர்களையும், அவரால் ஓரங்கப்பட்டவர்களையும் தன் பக்கம் வளைக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டுள்ளாத தெரிகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அழகிரி “திமுகவில் மீண்டும் இணைய நான் விரும்புகிறேன் என்றும் ஸ்டாலின் தலைவராக ஏற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு எதிராக புயலை கிளப்புவார் என எதிர் பார்க்கப் பட்ட நிலையில் அழகிரியின் அறிவிப்பு திமுகவினரிடையா சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...