சிண்டு முடியும் தம்பித்துரை!

ஆகஸ்ட் 30, 2018 1472

சென்னை (30 ஆக 2018): மூத்தவர் அழகிரி இருக்க இளையவர் ஸ்டாலின் திமுக தலைவராக்கப் பட்டது குறித்து தம்பித்துரை விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து அந்த பதவி காலியானது. இதைத்தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் ஸ்டாலினை எதிர்த்து யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால், நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் ஒரு மனதாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் .

இந்நிலையில் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றது குறித்து மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது என கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...