ஒரு லட்சம் பேருக்கு நான் எங்கே போவேன் - அழகிரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

ஆகஸ்ட் 30, 2018 727

சென்னை (30 ஆக 2018): ஸ்டாலினை திமுக தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அழகிரி கூறியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அழகிரியை கிண்டல் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.

கருணாநிதி மறைந்த பிறகு அழகிரி அவ்வப்போது திடீர் புயலை கிளப்பி வந்தார். வரும் 5 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பேரணி ஒன்றையும் அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று திமுகவில் இணைந்து செயல்படத் தயார் என்றும், ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் அழகிரி அறிவித்துள்ளார்.

இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் பேரணியில் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று அழகிரி கூறியுள்ள நிலையில், வடிவேலு ரேஞ்சுக்கு அழகிரியை கிண்டல் அடித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...