பாஜக மீது டாக்டர் ராமதாஸ் மறைமுக தாக்கு!

August 31, 2018

சென்னை (31 ஆக 2018): தமிழகத்தில் காலூண்ற நினைக்கும் மூன்றெழுத்துக் கட்சியை வளர விடக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாமகவின் இளைஞரணி மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:

மூன்றெழுத்தில் கொண்ட அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. பாமக கூட மூன்றெழுத்து கட்சிதான். இருப்பினும் ஒருசில அமைப்புகள், மூன்றெழுத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்றெழுத்து் கட்சியை, தமிழகத்தில் ஒருபோதும் வளரவிடக்கூடாது.

எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில், மூன்றெழுத்துக் கட்சியை வேரூன்றவிடக் கூடாது. அதைத் தடுக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு. மூன்றெழுத்து கட்சி ஆபத்தானது என்று கூறியுள்ளார். இவர் குறிப்பிட்ட மூன்றெழுத்து கட்சி பாஜக என்று மக்கள் தெளிவாக புரிந்து கொண்டனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!