பண மதிப்பிழப்பு குறித்து இன்று வரை தெரியாத பாட்டியின் குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம்!

செப்டம்பர் 01, 2018 800

தேனி (01 செப் 2018): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப் பட்டது கிராமத்து மக்களே, அதில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் பரிதாபம்.

தேனியை அடுத்த வீரபாண்டி அருகே உள்ள உப்புக் கோட்டை பகுதியை சேர்ந்த பாப்பாத்தி என்ற பாட்டி பண மதிப்பிழப்பு குறித்து இன்று வரை தெரியாமல் இருந்து வந்துள்ளார். அவர் தனது பேரக் குழந்தைகளுக்காக ரகசியமாக வீட்டில் பல லட்ச ரூபாய் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் பாட்டி திடீரென இறந்து போனார். பின்பு அவரது பொருட்களை வீட்டில் உள்ளோர் அப்புறப் படுத்தியபோது அதிர்ந்து போனார்கள். அவர் 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

என்ன செய்து என்ன பயன்? அந்த பணத்தை என்ன செய்ய முடியும்? ஆனால் பாட்டியின் பாசத்தை நினைத்து குடும்பத்தினர் நெகிழ்ந்து போயுள்ளனர்.

மேலும் இதுபோன்று பல கோடி பாட்டிகள் பண மதிப்பிழப்பு குறித்து தெரியாமல் இந்தியாவில் இன்றும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...