மறக்க முடியுமா இன்றைய தினத்தை?

செப்டம்பர் 01, 2018 659

அரியலூர் (01 செப் 2018): டாக்டராகும் கனவுடன் நீட் தேர்வு முறையால் கனவு சிதைந்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட தினம் இன்று.

தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு முதல்முறையாக நடத்தப்பட்டது. இந்த தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று அரசு தெரிவித்தும் அதை மத்திய அரசு கேட்டுக் கொள்ளவில்லை.

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். அப்போது பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூர் மாணவி அனிதாவும் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றார்.

உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காததை அடுத்து வீட்டில் தனியாக இருந்த போது அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது. எனினும் இன்று வரை நீட் தேர்வு கொடுமை தொடர்ந்து கொண்டே உள்ளது.

அனிதா இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. நீட் தேர்வு முறை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று அனிதா ஒரு வருடம் மருத்துவ படிப்பை முடித்திருப்பார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...