விஜய்காந்துக்கு என்னதான் பிரச்சனை? - பரபரப்பு பின்னணி!

September 01, 2018

சென்னை (01 செப் 2018): தேமுதிக தலைவர் விஜய்காந்த் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அவரது குடும்பத்தினர் அவருக்கு எதுவும் பெரிய பிரச்சனை இல்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய்காந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. அவர் நன்றாக இருக்கிறார். உடல் நலம் பெற்று விரைவில் திரும்புவார் என தேமுதிக தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

சர்க்கரை, தொண்டையில் செய்த அறுவை சிகிச்சை, தைராய்டு ஆகியவற்றால் விஜயகாந்த் பாதிக்கப்பட்டுள்ளார். நடப்பதற்கும், பேசுவதற்கும் மிகவும் சிரமப்படுகிறார். அவ்வப்போது அவருக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது. நண்பவர்கள் அவரை சந்தித்தால் படப்பிடிப்பின் போது நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசுவது விஜயகாந்தின் வழக்கம். ஆனால், தற்போது வருபவர்கள் யார் என்பதையே உணரமுடியாதவராக அவர் இருக்கிறார். இது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா சென்று 40 நாட்கள் சிகிச்சை எடுத்தும் விஜயகாந்த் உடலில் எந்த முன்னேறமும் ஏற்படவில்லை. எனவே, அவரை மீண்டும் அமெரிக்கா அல்லது சிங்கப்பூர் சென்று சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!