குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பியோடிய பெண் போலீசில் சிக்கினார்!

செப்டம்பர் 02, 2018 1234

குன்றத்தூர் (02 செப் 2018): தனது குழந்தைகள் இரண்டையும் கொன்று விட்டு தப்பியோடிய பெண் நாகர் கோவில் போலீசாரிடம் சிக்கினார்.

குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி அபிராமி, விஜய் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். முதல் குழந்தை அஜய்-யும், 2-வது குழந்தை கார்னிகா-வும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

நேற்று இரவு விஜய் வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறமாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இரண்டு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்தனர். குழந்தைகள் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து விஜய் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்துவிட்டு குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மேலும் அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரியவந்தது. அதன் காரணமாகதான் நேற்று முந்திய தினம் இரவு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.


இதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போன்களுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன?, செத்தால் என்ன?” என குறிப்பிட்டு இருந்தார்.

அதை பார்த்த விஜய், “ஏன் இப்படி செய்தாய்? எனக்கேட்டு மீண்டும் மனைவியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். ஆனால் அவரிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு விஜய், தொடர்பு கொண்ட போது மீண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச்சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.

குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.

இந்த நிலையில், பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...