வீட்டுக்கு வந்தார் விஜய்காந்த்!

செப்டம்பர் 02, 2018 473

சென்னை (02 செப் 2018): உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த விஜய்காந்த் வீடு திரும்பினார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திடீர் என்று மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். விஜயகாந்த் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.

தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதால் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். எனினும் ஏற்கனவே அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று திரும்பிய விஜய்காந்த் அவர் மீண்டும் வெளிநாட்டில் சிகிச்சை பெற செல்லலாம் எனவும் தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...