மூன்றாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு செருப்படி!

September 02, 2018

சேலம் (02 செப் 2018): சேலத்தில் மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பொதுமக்கள் அடித்து துவைத்துள்ளனர்.

சேலத்தில் 3 ரோடு பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார்(24) என்பவர் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அந்த பள்ளியில் படித்து வரும் 3 ஆம் வகுப்பு சிறுமியிடம் சதீஷ்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன பெற்றோர், பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியர் சதீஷ்குமாரை பள்ளியில் இருந்து தரதரவென வெளியே இழுத்து வந்து சரமாரியாக செருப்பால் அடித்து துவைத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கைது செய்தனர். .

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!