நெதர்லாந்து பெண் சென்னையில் மர்ம மரணம்!

செப்டம்பர் 02, 2018 645

சென்னை (02 செப் 2018): நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சென்னையில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

24 வயதான லிண்டா ஐரீன் என்ற அந்தப் பெண் சென்னை கன்வென்ஷன் மையத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்துள்ளார். அவர் நேற்றுடன் அறையை காலி செய்துவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. மேலும், மையத்திலிருந்து அவருக்கு விடுக்கப்பட்ட போன் அழைப்புகளையும் லிண்டா எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த மையத்தின் ஊழியர்கள், அவர் தங்கியிருந்த அறைக்கான நகல் சாவியை வைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் லிண்டா, மர்மமான முறையில் இறந்துள்ளது தெரிந்திருக்கிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...