கடை மடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லாதது வேதனை - ஸ்டாலின்!

செப்டம்பர் 03, 2018 485

திருச்சி (03 செப் 2018): மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப் பட்டும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது வேதனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் மதகு உடைந்துள்ளது. முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து தண்ணீர் திறந்து விட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மதகுகளை சீரமைக்கும் பணியானது, 40 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...