மெரினாவில் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை!

செப்டம்பர் 03, 2018 668

சென்னை (03 செப் 2018): சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை மெரினாவில் இரண்டு வருடம் முன் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் உலகம் முழுக்க பெரிய அளவில் வைரலானது. இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்ப்பும் கிடைத்தது.

இதன் எதிரொலியாக மெரினாவில் தொடர்ச்சியாக போராட்டம் நடக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் தமிழக அரசு இது எதற்கும் அனுமதி அளிக்கவில்லை. மெரினாவில் போராட்டம் நடத்த கூடாது என்று அரசு தடை விதித்தது.

ஆனால் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் முடிவில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே காவிரி பிரச்சனைக்காக போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு அனுமதி கோரி மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...