அழகிரி ஸ்டாலினை சந்திக்க திட்டமா?

செப்டம்பர் 03, 2018 392

சென்னை (03 செப் 2018): அழகிரி ஸ்டாலினை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

திமுக விலிருந்து நீக்கப் பட்ட அழகிரி கருணாநிதி மறைவுக்குப் பிறகு தனி பலத்தைக் காட்டப் போவதாக வரும் 5 ஆம் தேதி பேரணி அறிவித்துள்ளார். ஒரு லட்சம் பேர் பேரணியில் கலந்து கொள்வார்கள் என அழகிரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே திமுகவில் மீண்டும் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளதாகவும் அழகிரி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஸ்டாலினை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தற்போது தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...