விசுவை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்!

செப்டம்பர் 03, 2018 753

சென்னை (03 செப் 2018): ஹெச் ராஜா குறித்து நடிகரும் இயக்குநருமான விசு கூறிய கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனப் பொருளாகியுள்ளது.

இந்து கோவில் சொத்துக்களை மீட்கவும், கோவில் சொத்துகளுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படாததை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஒருநாள் ஹெச்.ராஜா தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. அதில், பாஜக ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விசு, இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஹெச்.ராஜா என புகழ்ந்து பேசினார்.

இந்நிலையில் விசுவின் பேச்சு குறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் விசுவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...