நானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக - ஸ்டாலின் அதிரடி!

செப்டம்பர் 03, 2018 955

சென்னை (03 செப் 2018): திமுக தலைவர் ஸ்டாலின் இன்று செய்துள்ள ட்விட்டில் நானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று கடுமையாக பாஜகவை விமர்சித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றுள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஷோபியா என்ற பெண் பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டுள்ளார். இதனையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பெயரில் ஷோபியா கைது செய்யப்பட்டார்.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் “ஜனநாயக விரோத, கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று பதிவிட்டுள்ளார்.

ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?

நானும் சொல்கின்றேன்!

“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” https://t.co/JoPajdrSW5

— M.K.Stalin (@mkstalin) September 3, 2018

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...