யார் இந்த சோபியா?

September 04, 2018

தூத்துக்குடி (04 செப் 2018): 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று கோஷமிட்டு கைதான சோபியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்று தெரிய வந்துள்ளது.

நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணித்தார். இந்த விமானந்தில் பயணித்த மாணவி 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாணவி சோபியா நேற்று மாலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படார். இதனையாடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சோபியா தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதும், கனடா நாட்டில் ஆராய்ச்சி மாணவராக பயின்று வரும் இவர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நெடுநாட்களாக போராட்ட குரல்களை எழுப்பி வருகின்றார் என்பது தான் உண்மை.

நேற்று அவர் 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' கோஷமிடுவதற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் பல பதிவுகள் இட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தமிழிசையைக் கண்டதும் கோஷமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!