பாஜக வுக்கு எதிராக கோஷமிட்ட சோபியாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

செப்டம்பர் 04, 2018 780

தூத்துக்குடி (04 செப் 2018): 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று கோஷமிட்டதால் கைதான சோபியாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் நடுவானில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை பார்த்த சோபியா என்ற பெண், 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சோபியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள் சோபியாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், சிகிச்சை முடிந்த பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சோபியாவின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...