பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்தனர் - சோபியாவின் தந்தை!

செப்டம்பர் 04, 2018 505

தூத்துக்குடி (04 செப் 2018): சோபியாவுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப் பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி அவரது தந்தை மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் சோபியாவை பாஜகவினர் சூழ்ந்து கொண்டே கெட்டவார்த்தையில் திட்டியதாகவும், தவறாக புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோபியாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே சோபியாவிற்கு ஜாமீன் வழங்குவது குறித்த விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...