சோபியாவுக்கு நிபந்தனை அற்ற ஜாமீன் - நீதிமன்றம் அதிரடி!

செப்டம்பர் 04, 2018 636

தூத்துக்குடி (04 செப் 2018): 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று கோஷமிட்டு கைதான சோபியாவுக்கு நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணித்தார். இந்த விமானந்தில் பயணித்த மாணவி 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாணவி சோபியா நேற்று மாலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படார். இதனையாடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சோபியா தரப்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப் பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...