15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது!

செப்டம்பர் 04, 2018 632

சென்னை (04 செப் 2018): சென்னையில் கோயிலுக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள கங்கையம்மன் கோயிலுக்கு அடிக்கடி சென்று சாமி கும்பிடுவார்.

இந்நிலையில் அந்தக் கோயிலின் அர்ச்சகராக இருக்கும் நடராஜ் (62) மாணவியிடம் அன்பாக பேசி, பழகியுள்ளார். இந்நிலையில், அவர் அந்த மாணவியை கோவில் அருகில் உள்ள கட்டிடம் ஒன்றின் கழிவறையில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், துறைமுகம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அர்ச்சகர் நடராஜனை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் அர்ச்சகர் நடராஜ் கடந்த 2 ஆண்டுகளாக அந்த மாணவியிடம் அன்பாக பேசுவதுபோல் நடித்து அடிக்கடி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...