முன்னாள் டிஜிபி ஜார்ஜ் மற்றும் அமைச்சர் வீடுகளில் சிபிஐ சோதனை!

செப்டம்பர் 05, 2018 380

சென்னை (05 செப் 2018): முன்னாள் டிஜிபி ஜார்ஜ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

குட்கா விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அதிகாரிகளின் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

இந்த சோதனையின் போது குட்கா விவகாரம் தொடர்பான முக்கியமான ஆவணங்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழக காவல் துறை இயக்குனராக பணிபுரிபவர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்துவது என்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த சோதனை சென்னை மட்டுமின்றி மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...