பாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து!

செப்டம்பர் 06, 2018 674

ராமேஸ்வரம் (06 செப் 2018): பாம்பன் ரெயில் பாலம் வலு விழக்கும் நிலையில் உள்ளதால் அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தெற்கு முனையான ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்போடு இணைக்கும் முக்கியமான பாலம் பாம்பன் பாலம். மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதியில் உள்ள இந்த ரயில் பாலம் 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்தியாவில் உள்ள 2-வது மிக நீண்ட கடல் பாலமான இந்த பாலத்தை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள 146 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்த ரயில் பாலத்தின் நடுவில் கப்பல்கள் கடந்து செயல்வதற்கு ஏதுவாக தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தூக்கு பாலம் கடந்த 100 ஆண்டுகளாக நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. கடல் நீரிலேயே இருப்பதால் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரசாயன வர்ணம் பூசப்பட்டு ரயில்வே துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக ரசாயன வர்ணம் பூசி தூக்குப்பாலம் பராமரிக்கப்படாமல் இருப்பதாக ராமேஸ்வரம் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...