திருப்பூர் அருகே விநாயகர் சிலைகள் பறிமுதல்!

செப்டம்பர் 07, 2018 640

திருப்பூர் (07 செப் 2018): திருப்பூர் அருகே ரசாயணம் கலந்த விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகளின் விற்பனை மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் விற்கப்படும் சிலைகளில், நிறத்தை அதிகரிப்பதற்காக அதிகளவில் ரசாயன மூலப் பொருட்கள் கலப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் வடக்கு மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா தலைமையில் அதிரடி சோதனை நடைபெற்றது.

இதில் அவினாசி சந்தை மற்றும் அணைப்புதூர் பகுதிகளில் விற்கப்பட்ட சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் ரசாயன நிறமிகள், சிலைகளில் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...