ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம்!

செப்டம்பர் 07, 2018 578

சென்னை (07 செப் 2018): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையின் திடீர் திருப்பமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோவில் தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த விசாரணையின் திடீர் திருப்பமாக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...