அரசு தக்க விலை கொடுக்க நேரிடும் - ஸ்டாலின் எச்சரிக்கை!

செப்டம்பர் 08, 2018 487

சென்னை (08 செப் 2018): யோகேந்திர யாதவ் கைது செய்யப் பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை-சேலம் நடுவே அமைக்கப்பட உள்ள ரூ.1000 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை சந்திக்க யோகேந்திர யாதவ் இன்று சென்றார்.

செங்கம் காவல் நிலைய எல்லையில் வைத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருடன் யோகேந்திர யாதவும், தொண்டர்களும் வாக்குவாதம் நடத்தினர். இதை செல்போனில் வீடியோவாக எடுத்த தொண்டர்கள் தள்ளிவிடப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, யோகேந்திர யாதவை சந்திக்க காத்திருந்த விவசாயிகளையும் கூட போலீசார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட யோகேந்திர யாதவ், மாலையில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது விவசாயிகளை சந்திக்க அவர் முயன்றதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...