இந்து அமைப்பினரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது!

செப்டம்பர் 08, 2018 535

கோவை (08 செப் 2018): கோவையில் இந்து அமைப்பினரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி கட்சியின் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்வதற்காக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன் ஆகியோர் கோவை இரயில் நிலையத்தை வந்தடைந்த போது, 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோவை காவல் துறையினர், 4 பேருக்கும் உதவியாய் இருந்த ஆஷிக் என்பவரை கைது செய்து மேலும் 2 நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆட்டோ பைசல் என்ற நபரை நேற்று முன்தினம் காவல் துறையினர் கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...