ட்விட்டரை விட்டு விலகும் கமல் ஹாசன்?

September 08, 2018

சென்னை (08 செப் 2018): ட்விட்டரில் கருத்து சொல்வது சரியானதல்ல என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக் காட்சி நடத்தும் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கும் கமல்," வெறுமனே ட்விட்டரில் கருத்து தெரிவித்துக் கொண்டு இருக்காமல் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை "எனக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்" என்று அவர் மீது ட்விட்டரில் மட்டுமே கருத்து தெரிவிப்பார் என்கிற குற்றச் சாட்டுக்கும் பதிலளிக்கும் விதமாக கமல் இதனை தெரிவித்துள்ளார்.

அப்படியெனில் ட்விட்டரை விட்டு விலகி விடுவீர்களா? என்று கமலிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!