சென்னையில் தொடரும் கள்ளக் காதல்கள்!

September 09, 2018

சென்னை (09 செப் 2018): கணவனுக்கு இரவில் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு வேறொருவருடம் மனைவி உல்லாசமாக இருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாநகர் கிழக்கு, 'எல்' பிளாக்கைச் சேர்ந்தவர், ஞானசூரியன், வயது 42. ரயில்வே ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி உமாதேவி, இவருக்கு வயது 41. 2 மகள்கள் உள்ளனர்.உமாதேவிக்கு தனலட்சுமி என்ற தோழி இருக்கிறார். இவரது சகோதரர் பெயர் மணிகண்டன் 42. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

கடைசியில், உமாதேவியும், மணிகண்டனும் பழக்கமாகி நெருக்கமும் ஆயிட்டாங்க. உமாதேவியின் வீட்டுக்கு மணிகண்டன் வருவது, போவது என்று ஆரம்பமாயின. கள்ளக்காதல் தொடங்கியது. பிறகுதான் ஞானசூரியனுக்கு தெரியவந்தது, தனக்கு தன் மனைவி தினமும் இரவில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்துவிட்டதும், தான் தூங்கிய பிறகு மணிகண்டனை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருப்பதும். இதனால் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஞானசூரியன் அண்ணாநகர் போலீசில் இதுகுறித்து புகார் செய்ததுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை அதிரடியாக கைது செய்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!