தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு!

செப்டம்பர் 09, 2018 620

சென்னை (09 செப் 2018): தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குறிப்பிட கூடிய அளவில் மழை எதுவும் பதிவாகவில்லை. மேலும் வெப்பநிலையும் வழக்கத்தைவிட சற்று குறைவாகவே காணப்பட்டது.

சென்னையை பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...