ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை!

செப்டம்பர் 09, 2018 502

சென்னை (09 செப் 2018): ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆறாம் தேதியன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து இவர்கள் எழுவரையும் விடுதலைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்தன.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் மாலை 4.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் துவங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாநில மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பேரறிவாளன் என்பவரின் கருணை மனுவை 161வது பிரிவின் கீழ் பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் இவர்களைத் தவிர மீதமுள்ள ஆறு நபர்களும் அரசுக்கு மனு அளித்திருந்தனர். அதைக் கருத்தில் கொண்டு, 7 பேரையும் முன்விடுதலை செய்ய மேதகு ஆளுநருக்கு மேற்படி சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரைசெய்ய அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டது" என்று கூறினார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...