ஓரினச் சேர்க்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் மத போதகர் கூச்சலிட்டதால் பரபரப்பு!

செப்டம்பர் 10, 2018 650

கோவை (10 செப் 2018): ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கிறிஸ்தவ மத போதகர் கோவை நீதிமன்றத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை. இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு எதிராக கிறிஸ்துவ மத போதகர் ஜெபர்சன் கோவை நீதிமன்றத்தில் கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...