வாக்குப் பதிவு எந்திர முறைகேடு - நடிகர் மன்சூர் அலிகானே வாதிட்ட வழக்கு!

செப்டம்பர் 11, 2018 466

சென்னை (11 செப் 2018): வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாகவும். அதனை சோதனை செய்ய வேண்டும் என்ற நடிகர் மன்சூர் அலிகானின் மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டது.

நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பல முறைகேடுகள் நடப்பதகவும், அதனால் அவற்றை தொடர்ந்து 7 நாட்கள் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டுமென நடிகர் மனுசூர் அலிகான் அளித்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், நிபுணர்களை கொண்டும், தன் விருப்பப்படி உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சோதனை செய்ய அனுமதிக்கவும் கோரியிருந்தார்.

இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு ஜூலை 10ஆம் தேதி அனுப்பிய மனு பரிசீலிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் மன்சூர் அலிகானே ஆஜராகி வாதிட்டார். பின்னர் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...