ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க மத்திய அரசு முட்டுக்கட்டை?

செப்டம்பர் 12, 2018 605

புதுடெல்லி (12 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க மத்திய அரசு தடை விதிக்கக் கூடும் என தெரிகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்ட நிலையில், தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை கடிதம் எழுதியது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இவர்களை விடுதலை செய்ய தடை விதிக்கக் கூடும் என தெரிகிறது. எனவே ஏழுபேர் விடுதலையில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...