என்ன கொடுமை சார்? இந்த அதிமுக எம்.எல்.ஏவுக்கு வந்த சோதனை!

செப்டம்பர் 12, 2018 605

ஈரோடு (12 செப் 2018): ஈரோடு அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43). இவரது சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும். ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்ற இளம் பெண்ணுக்கும் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்.சி.ஏ. வரை படித்துள்ளார்.

இதற்காக திருமணம் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மணமகள் வீட்டிலும் மற்றும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வும் அவரது உறவினர்களும் கடந்த ஒரு வாரமாக திருமண பத்திரிகையை கொடுத்து வந்தனர்.

ஆனால் தன்னை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டதாக சந்தியா அளித்த புகாரை அடுத்து வேறொரு பெண்ணுக்கும் ஈஸ்வரனுக்கும் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் அந்த திருமணமும் ரத்து செய்யப் பட்டுள்ளது. வரவிருக்கும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடத்த திட்டமிட்டு திருமணத்தை ஒத்தி வைத்ததாக ஈஸ்வரன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...