திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்!

செப்டம்பர் 13, 2018 573

சென்னை (13 செப் 2018): திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. பல ஆண்டுகளாக அப்பகுதியில் சத்யா அழகு நிலையம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே போன்று பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார். அப்பகுதியில் அதிக செல்வாக்கு பெற்றவராக உள்ளார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்

கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...