ஏழை மருத்துவ மாணவிக்கு கமல் ஹாசன் ரூ 5 லட்சம் நிதியுதவி!

செப்டம்பர் 13, 2018 710

பெரம்பலூர் (13 செப் 2018): மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு கமல் ஹாசன் ரூ 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமணி கூலித் தொழிலாளி.. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு கனிமொழி (21) என்ற மகள் உள்ளார். இவர் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் ஆகியவை கட்ட முடியாமல் தவித்து வந்தார். இதனால் மாணவியின் படிப்பு கேள்விக்குறியானது. இதுகுறித்து தகவலறிந்த கமல்ஹாசன் மாணவியை சந்தித்து ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...