சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் நிறுத்தம்!

செப்டம்பர் 15, 2018 534

சென்னை (15 செப் 2018): சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எட்டுவழிச்சாலை திட்டத்தை மாற்றம் செய்வது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நடைபெறாது என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் தெரிவித்தார்.

திட்டம் தொடர்பாக மத்திய அரசு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.வி கிருஷ்ண மூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் சுந்த்தர்ராஜன், மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...