ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து கவர்னர் திடுக் தகவல்!

செப்டம்பர் 15, 2018 555

சென்னை (15 செப் 2018): ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நேற்றுதான் கவர்னர் மாளிகைக்கு வந்து சேர்ந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை கேட்டு மத்திய உள்துறைக்கு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை.

7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும். இது குறித்து ஆலோசனைகள் நடத்த வேண்டி உள்ளது. தேவைப்படும்போது தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...