நான் அப்படி பேசவே இல்லை - ஹெச்.ராஜா அந்தர் பல்டி - வீடியோ!

செப்டம்பர் 16, 2018 927

சென்னை (16 செப் 2018): நீதிமன்றத்தை ஆபாச வார்த்தைகளில் பேசிய பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா நான் அப்படி பேசவே இல்லை என்று பல்டி அடித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் அந்த வழியில் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவிற்கும் அங்கு தடைமீறி வரக்கூடாது என பாதுகாப்பில் இருந்த போலீசாருக்கும் வாக்கு வாதம் முற்றியது.

வீடியோ

அப்போது காவலர்கள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் ஆன்டி இந்தியன்ஸ் என திட்டினார். மேலும் இங்கு உள்ள ஒவ்வொரு இந்துக்களின் வீட்டின் வழியாக கண்டிப்பாக இந்த ஊர்வலம் நடக்கும் முடிந்தால் தடுத்து பாருங்கள் என வன்மையாக காவலர்களிடம் பேசினார். ஆனால் போலீசார் இந்த பகுதியில் ஊர்வலம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது என எடுத்து கூறினர். ஆனால் நீதிமன்றத்தை ஆபாச வார்த்தையில் திட்டிய ஹெச்.ராஜா அதையும் மீறி ஊர்வலத்தை நடத்தினார்.

இதற்கிடையே ஹெச்.ராஜா நீதிமன்றத்தை ஆபாச வார்த்தைகளால் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் நான் அப்படி பேசவில்லை என்றும் யாரோ எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்றும் ஹெச் ராஜா பல்டி அடித்துள்ளார்.

ஹெச் .ராஜா ஒரு மோசமான கருத்தை தெரிவித்துவிட்டு அப்படி எதுவும் பேசவில்லை என்று பல்டி அடிப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...