நீதிமன்றத்தை ஆபாசமாக பேசிய ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

செப்டம்பர் 16, 2018 555

சென்னை (16 செப் 2018): உயர் நீதிமன்றம் மீது ஆபாசமாக பேசிய புகாரில் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் நீதிமன்றத்தை விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “எச்.ராஜா காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்து மிக மோசமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காவல்துறையினர் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் மோசமான சொற்களை பயன்படுத்தி பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது” என்று கூறினார்.

இதற்கிடையே , ஹெச். ராஜா நீதிமன்றத்தை ஆபாசமாக பேசிய புகாரில் புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சமூக வலைதளங்களில் பரவிய எச்.ராஜாவின் வீடியோவை தொடர்ந்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நான் அப்படி பேசவே இல்லை என்று எச்.ராஜா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...