மணமக்களுக்கு ஒரு சுவாரஸ்ய திருமணப் பரிசு!

செப்டம்பர் 16, 2018 493

கடலூர் (16 செப் 2018): கடலூரில் ஒரு புதுமணத் தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக 5 லிட்ட பெட்ரோல் அளிக்கப் பட்டுள்ளது.

நாடெங்கும் பெட்ரோல், டிசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசு இதுவரை பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் அன்பளிப்பாக வழங்கிய ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...