கோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான்: பாஜக!

செப்டம்பர் 19, 2018 857

கோவை (19 செப் 2018): கோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான். ஆனால் நாங்கள் அவர்களை காட்டிக் கொடுக்கவே இல்லை என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டத்தில் மத்திய கயிறு வாரிய தலைவரும், பாஜக தேசிய குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த 1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான காவலர் செல்வராஜ் வெட்டி கொல்லப்பட்டதை அடுத்து, நடந்த அத்தனையும் (கலவரம்) பாஜகவோ, இந்து முன்னணி செய்தது அல்ல எனவும், காவல்துறையினரே பொறுக்க முடியாமல் செய்தது தான் எனவும் தெரிவித்தார்.

ஆனால், காவல்துறையினரில் ஒருவரை கூட ஒரு போதும் பாஜகவினர் காட்டி கொடுக்கவில்லை எனவும், காவல் துறையைக் காட்டி கொடுப்பது, தேசத்தை காட்டி கொடுப்பது என்று பாஜகவினர் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தை அவமதித்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது அரசு வழக்கு போட்டுள்ளது. அதை எதிர்கொள்ளும் ஆளுமை பாஜக தலைவர்களுக்கு உள்ளது. இதற்காக ஒருபோதும் தமிழக அரசுக்கு அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...