வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி - நீதிமன்றம் எச்சரிக்கை!

செப்டம்பர் 19, 2018 746

சென்னை (19 செப் 2018): சென்னை நகரில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தாவிட்டால், மாநகர காவல் ஆணையரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதித்து ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சென்னை நெசப்பாக்கத்தில் சேர்ந்த சங்கர் என்பவர், தங்கள் பகுதியில் உள்ள மசூதியில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சென்னை நகரில் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்துவதை உறுதி செய்யும்படி உத்தரவிட்டார்.

இதனை தவறினால் சென்னை மாநகர காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...