பாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

செப்டம்பர் 19, 2018 703

சென்னை (19 செப் 2018): பெரியார் சிலை மீது செருப்பு வீசிய பாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தந்தை பெரியாரின் 140-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் (17-09-2018) மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு வி.சி.க-வினர் மரியாதை செலுத்திக்கொண்டிருந்தபோது பைக்கில் வந்த பா.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் செருப்பு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அவரின் தொண்டர்களுடன் சென்னை, சிம்சன் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று திருப்பூரிலும் மர்ம நபர் ஒருவர் பெரியார் சிலை மீது செருப்புகளை வீசிவிட்டு தப்பியோடிருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களும் பெரியார் பிறந்த தினத்தன்று பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது வழக்கறிஞர் ஜெகதீசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...