கருணாஸுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்மந்தம்?

செப்டம்பர் 22, 2018 451

சென்னை (22 செப் 2018): கருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?. திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது. ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம்.

ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான், திறக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” இவ்வாறு அவர் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...