சென்னை ஐஐடியில் மீண்டும் அதிர்ச்சி!

செப்டம்பர் 22, 2018 512

சென்னை (22 செப் 2018): சென்னையில் ஐஐடி மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜமுனா விடுதியில் தங்கியிருந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஷாஜஹான் குர்முத்தின் மகனான ஷாஹித் குர்முத்(23), இவர் சென்னை ஐஐடியில் பெருங்கடல் பொறியியல் பிரிவில் 5 ஆண்டு பட்டப்படிப்பை பயின்று வந்தார். இந்நிலையில் அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷாஹித்தின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பெற்றோரிடம் நடத்தும் விசாரணையை அடுத்து போலீசார் அடுத்த விசாரனையை தொடங்கக் கூடும் என எதிர் பார்க்கப் படுகிறது.

ஐஐடி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...