நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது: ஹெச்.ராஜா

செப்டம்பர் 25, 2018 623

சென்னை (25 செப் 2018): என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் நீதிமன்றத்தை விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், 4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நீதிபதி தகில் ரமானி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கரிஞர், எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம், சி.டி.செல்வம் அமர்விற்கு அதிகாரம் கிடையாது என்றும், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே நேரில் ஆஜராக உத்தரவிட முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...