மண்ணெண்ணெயை குடித்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!

செப்டம்பர் 25, 2018 573

கோவை (25 செப் 2018): பொள்ளாச்சி மாவட்டத்தில் மண்ணெண்ணெயை குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனன்யா என்ற அந்த குழந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தவறுதலாக எடுத்து குடித்துள்ளது. இதையடுத்து வயிறு வலி தாங்க முடியாமல் அனன்யா கதறி அழுதுள்ளார்.

அனன்யாவின் அழு குரல் கேட்டவுடன், விரைந்து வந்த அவரது பெற்றோர்கள் அவரை அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் அனன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...